ETV Bharat / state

அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது அரசு மருத்துவர் புகார் அளிக்கும் பரபரப்பு வீடியோ...! - உதவி உறைவிட மருத்துவர்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி உறைவிட மருத்துவராக பணிபுரிந்த தீனதயாளன் என்பவர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தன்னை தரக்குறைவாக பேசியதோடு பணியிட மாற்றம் செய்ததாகக் கூறி, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது அரசு மருத்துவர் புகார் அளிக்கும் பரபரப்பு வீடியோ..!

author img

By

Published : Aug 7, 2022, 6:49 AM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ.ஆர்.எம்.ஓ. எனப்படும் உதவி உறைவிட மருத்துவராக தீனதயாளன் என்பவர் பணியாற்றி வந்தார். சிறிது காலத்திற்கு முன்னதாக இவரை பொறுப்பு உறைவிட அலுவலராக பணியமர்த்தியுள்ளனர்.

இந்நிலையில், தீனதயாளன் நேற்று (ஆக. 6) வெளியிட்ட காணொலியில், அவர் பொறுப்பிற்கு வந்த பிறகு மருத்துவமனையில் நடைபெறும் சில ஊழல்களையும், பாலியல் சீணடல்களையும் தட்டிக் கேட்டதாகக் கூறுகிறார். சில மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பாலியல் அத்துமீறல், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகக் கூறுகிறார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது அரசு மருத்துவர் புகார் அளிக்கும் பரபரப்பு வீடியோ..!

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலர் ஆகியோருக்கு வாட்ஸ்-அப் மூலமாக ஆதாரங்களுடன் தகவல் அனுப்பியதாகவும் தெரிவிக்கிறார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆதாரங்களை எடுத்துக்கொண்டு அமைச்சரை நேரில் சந்திக்க சென்றபோது, அமைச்சர் மா.சுப்ரமணியம் தீனதயாளனை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல், அவரை செங்கல்பட்டில் இருந்து சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிட்டதாகவும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 25 தொழிலாளர்கள் தங்களது குறைகளை அமைச்சரிடம் தெரிவிக்க சென்ற நிலையில், அவர்களையும் அமைச்சர் பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறார். மேற்கண்ட குற்றச்சாட்டுகளை காணொலியில் பதிவிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீனதயாளன் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "காவிரி கரையோர மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு" - அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.