செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வட்டார சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை ஆகியவை சார்பில் மாவட்ட அங்கன்வாடி மைய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தினர். மேலும் இந்த விழாவில் வினாடி வினா, கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
மாவட்ட திட்ட அலுவலர் சற்குணம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், ராஜ், சுனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி!