திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒன்பது மணியளவில், சென்னையை நோக்கி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை என்ற இடத்தில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம்செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: 45ஆவது எழுச்சி நாளை கொண்டாடவுள்ள இந்திய கடலோர காவல்படை!