ETV Bharat / state

மின்வாரிய ஊழியரை குடும்பத்தோடு கட்டிப்போட்டு கொள்ளையடித்த கும்பல் - மின்வாரிய ஊழியர்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் வீடு புகுந்து நள்ளிரவில் கொள்ளையடித்த சம்பவத்தில், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங் தெரிவித்தார்.

மின்வாரிய ஊழியரை குடும்பத்தோடு கட்டிப்போட்டு கொள்ளையடித்த கும்ப

author img

By

Published : Sep 24, 2022, 4:50 PM IST

செங்கல்பட்டு: மேல்மருவத்தூரில் மின்வாரிய ஊழியரான ஹரிஹரன் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்த 10 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், 80 ஆயிரம் ரொக்கப் பணம் நேற்று கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங் கூறுகையில், "மின்வாரிய ஊழியர் ஹரிஹரனின் குடும்பத்தினரை கத்தி முனையில் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டிலிருந்து இந்த கொள்ள சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஏழு பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது. அவர்களை பிடிக்க செங்கல்பட்டு உட்கோட்ட டிஎஸ்பி பரத், மதுராந்தகம் உட்கோட்ட டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில், மதுராந்தகம் ஆய்வாளர் தர்மலிங்கம், அச்சிறுப்பாக்கம் பொறுப்பு ஆய்வாளர் சிவக்குமார், சூனாம்பேடு ஆய்வாளர் மதிய ரசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க: சார்ஜ் போட கொடுத்த செல்போன் மூலம் நூதன முறையில் 3 லட்சம் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.