சட்டப்பேரவையில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேசுகையில், "டிக் டாக் செயலியானது ஆபாச வீடியோ பதிவிடுவதால், சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கிறது. எனவே அதை தடை செய்ய அரசு முன்வரவேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் மணிகண்டன், "தமிழ்நாட்டில் டிக் டாக் செயலி உறுதியாக தடை செய்யப்படும். டிக் டாக் செயலியை தடை செய்வது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.