ETV Bharat / state

‘மகிழ்ச்சியையும் மாண்புகளையும் மீட்டெடுக்கும் ஆண்டாக அமையட்டும்’ - டிடிவி வாழ்த்து - வாழ்த்துக்கள்

சென்னை: இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய மொழியும், பண்பாடும், கலாச்சாரமும் எல்லோராலும் வியந்து போற்றத்தக்கதாக, மதித்து பின்பற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது என்று தனது சித்திரைத் திருநல்வாழ்த்து செய்தியில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
author img

By

Published : Apr 13, 2019, 4:56 PM IST

அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழகத்திலும் உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற எம் தமிழ் மக்களுக்கு இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகளை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் ஆதி மொழியாகத் தமிழும், மூத்த குடிமக்களாகத் தமிழர்களும் விளங்குவதை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. அதனால்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய மொழியும், பண்பாடும், கலாச்சாரமும் எல்லோராலும் வியந்து போற்றத்தக்கதாக, மதித்து பின்பற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் தமிழகமும், தமிழ் மொழியும், தமிழர் வாழ்வும் மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நம்முடைய மாண்புகளைக் குலைக்கிற வேலைகள் வேக, வேகமாக நடக்கின்றன. அதற்கு இங்கிருந்தே சில சுயநலவாதிகள் காரணமாகி இருப்பதும், நம் கண்ணெதிரிலேயே தமிழர்களின் விழுமியங்கள் அழித்தொழிக்கப்படுகிற நிலையும் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலை மாறி, உண்மையான வசந்தமும், மகிழ்ச்சியான வாழ்வும் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது. தமிழகம் மட்டுமல்லாது; உலக நாடுகளில் இருக்கிற தமிழர்களும் அத்தகைய புத்தம் புது மாற்றத்தையும், ஏற்றத்தையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

“தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளின் படி தமிழர்கள் எப்போதும் துரோகிகளையும், எதிரிகளையும் மன்னிக்க மாட்டார்கள் என்பதை இத்திருநாளில் இன்னொரு முறை தெளிவாக்கிடத் தயாராகி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியோடு ஒவ்வொரு தமிழரின் வீடுகளிலும் வசந்த மலர் பூத்திடவும், நம்முடைய மொழியை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, உரிமைகளை எல்லாவற்றுக்கும் மேலாக அடிமைப்பட்டு கிடக்கிற நம்முடைய தமிழ்நாட்டை அதன் மாண்புகளோடு மீட்டெடுக்கப் போகிற ஆண்டாக இது அமையட்டும். புதுப்புது வெற்றிகளைக் குவித்து, தமிழகமும், தமிழர்களும் தலை நிமிர்கிற நல்லாண்டாக மலரட்டும். நெஞ்சம் நிறைந்த சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

---------- Forwarded message ----------
From: "SINTHALAI PERUMAL S" <sinthalaiperumal.s@etvbharat.com>
Date: Apr 13, 2019 1:09 PM
Subject: Ceo meeting on 13.04.19
To: "Tamil Desk" <tamildesk@etvbharat.com>, "RAVIKUMAR N" <ravikumar.n@etvbharat.com>
Cc:

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 13.04.19

உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
மகிழ்ச்சியையும் மாண்புகளையும் மீட்டெடுக்கும் ஆண்டாக அமையட்டும்! தினகரன் வாழ்த்து...

அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
தமிழகத்திலும் உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற எம் தமிழ் மக்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் ஆதி மொழியாக தமிழும்,  மூத்த குடிமக்களாக தமிழர்களும் விளங்குவதை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. அதனால்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய மொழியும், பண்பாடும், கலாச்சாரமும் எல்லோராலும் வியந்து போற்றத்தக்கதாக, மதித்து பின்பற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது. 
ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் தமிழகமும்,தமிழ் மொழியும்,தமிழர் வாழ்வும் மிகப்பெரிய நெருக்கடிக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நம்முடைய மாண்புகளைக் குலைக்கிற வேலைகள் வேக, வேகமாக நடக்கின்றன. அதற்கு இங்கிருந்தே சில சுயநலவாதிகள் காரணமாகி இருப்பதும், நம் கண்ணெதிரிலேயே தமிழர்களின் விழுமியங்கள் அழித்தொழிக்கப்படுகிற நிலையும் பெரும் கவலையை  ஏற்படுத்தி இருக்கிறது. 
பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் இந்த நிலை மாறி, உண்மையான வசந்தமும், மகிழ்ச்சியான வாழ்வும் தமிழ்ச் சமூகத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது. தமிழகம் மட்டுமல்லாது; உலக நாடுகளில் இருக்கிற தமிழர்களும் அத்தகைய புத்தம் புது மாற்றத்தையும், ஏற்றத்தையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. “தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளின் படி தமிழர்கள் எப்போதும் துரோகிகளையும், எதிரிகளையும் மன்னிக்க மாட்டார்கள் என்பதை  இப்புத்தாண்டிலும்  இன்னொரு முறை தெளிவாக்கிட தயாராகி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியோடு ஒவ்வொரு தமிழரின் வீடுகளிலும் வசந்த மலர் பூத்திட, தமிழ்ப்புத்தாண்டை வரவேற்போம். நம்முடைய மொழியை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, உரிமைகளை எல்லாவற்றுக்கும் மேலாக அடிமைப்பட்டு கிடக்கிற நம்முடைய தமிழ்நாட்டை அதன் மாண்புகளோடு மீட்டெடுக்கப் போகிற புத்தாண்டாக விகாரி ஆண்டு அமையட்டும். புதுப்புது வெற்றிகளைக் குவித்து, தமிழகமும், தமிழர்களும் தலை நிமர்கிற நல்லாண்டாக மலரட்டும். நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.. 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.