ETV Bharat / state

'எடப்பாடி ஒரு உதவாக்கரை, மோடி ஒரு சர்வாதிகாரி' - வெளுத்து வாங்கிய ஸ்டாலின் - பிரச்சாரம்

சென்னை: வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஸ்டாலின், ஹீரோவான ராகுலை பார்த்து, மோடி ஜீரோ ஆகியுள்ளார் எனக் கடுமையாக சாடியுள்ளார்.

ஸ்டாலின்
author img

By

Published : Apr 8, 2019, 11:08 AM IST

Updated : Apr 8, 2019, 11:56 AM IST

வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், ‘ எடப்பாடி ஆட்சிக்கு மோடி முட்டுக்கொடுத்து வைத்துள்ளார். அதிமுக பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் எடப்பாடி ஆட்சி நிச்சயம் கவிழும். எடப்பாடி ஒரு உதவாக்கரை, மோடி ஒரு சர்வாதிகாரி’ என்றார்.

மேலும் பேசிய அவர், ‘மோடி இந்தியப் பிரதமர் அல்ல வெளிநாட்டுப் பிரதமர். ஹீரோவான ராகுலைப் பார்த்து மோடி ஜீரோ ஆகியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையைப் பார்த்து பலர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடி மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கவில்லை. கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது நீட் தேர்வை தடுக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் நீட் உள்ளே வந்துவிட்டது. அனிதா உயிரிழப்பு போன்ற கொடுமைகளை நிகழ்த்தியது அதிமுக. நீட் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுவரும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று குறிப்பிட்டிருப்பது பெரும் ஏமாற்று வேலை” என்றார்.

Intro:வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Body:அப்போது பேசிய அவர்: மோடி எடப்பாடி ஆட்சி முட்டுக்கொடுத்து வைத்துள்ளார்.
உங்களுடைய வாக்கு இந்தியாவின் தலைஎழுத்தையும் உங்கள் தலைஎழுத்தை மாற்றும் மேலும் 18 தொகுதி இடைத் தேர்தலில் நாம் தான் நிச்சயம் வெற்றி பெறுவோம். உங்கள் வாக்கை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அதிமுக பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் எடப்பாடி ஆட்சி நிச்சயம் கவரும் மேலும் எடப்பாடி ஒரு உதவாக்கரை மோடி ஒரு சர்வாதிகாரி என்றும் குற்றம் சாட்டினார். மோடி இந்தியா பிரதமர் அல்ல வெளிநாட்டு பிரதமர் ஹீரோவை (ராகுல்) பார்த்து ஜிரோ ஆகியுள்ளார் மோடி. திமுக தேர்தல் அறிக்கை பார்த்து பலர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடி மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கவில்லை. கலைஞர் ஆட்சியில் இருந்தபோது நீட் தடுக்க நடவடிக்கை எடுத்தார் .ஆனால் அதிமுக ஆட்சியில் நீட் உள்ளே வந்து விட்டது. அனிதா உயிரிழப்பு போன்ற கொடுமைகளை நிகழ்த்தியது அதிமுக. நீட் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது ஏமாற்று வேலை செய்கிறது. மாநகராட்சி மேயர் இல்லை உள்ளாட்சி தலைவர் இல்லை உள்ளாட்சி பொறுப்பை கொடுத்து விட்டால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் அதனை நடக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் .தொடர்ந்து பேசி அவர் மனித உடலில் ஏற்படும் கட்டியை வெட்டி எடுப்பது போல் மோடியும் எடப்பாடியும் வெட்டி எறியவேண்டும. நான் மேயராக இருக்கும் போது சாலை வசதி அரசு பள்ளி தரம் உயர்த்தியது, மின் விளக்குகள் மற்றும் 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மோடி வாக்குறுதி கொடுத்தது போல் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாரா, வங்கி கணக்கில் 15 லட்சம் பணம் போடப்படும் என்று சொன்னார் பணம் போட்டாரா ..இல்லை என்று பேசினார்.

Conclusion:மோடி வாக்குறுதி கொடுத்தது போல் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாரா, வங்கி கணக்கில் 15 லட்சம் பணம் போடப்படும் என்று சொன்னார் பணம் போட்டாரா ..இல்லை என்று பேசினார்.
Last Updated : Apr 8, 2019, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.