ETV Bharat / state

'சின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்'

சென்னை: பொதுமக்களின் செல்லப்பிள்ளையாக மாறிய சின்னத்தம்பி யானையை கும்கியால் தொந்தரவு செய்யாமல், அமைதியான முறையில் வனப்பகுதிக்குள் பத்திரமாக அனுப்பிவைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

File Pic
author img

By

Published : Feb 6, 2019, 9:18 AM IST

சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில்,

“கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானை பொதுமக்களின் செல்லப்பிள்ளையாக மாறி உள்ளது.

ஆகவே, பொதுமக்களின் உணர்வுகளை மதித்து அந்த யானையை கும்கியால் தொந்தரவு செய்யாமல் அரசு போதிய பாதுகாப்பு அளித்து பாதுகாப்பான முறையில் மீண்டும் வனப்பகுதிக்குள் பத்திரமாக அனுப்பிவைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல்அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.

நியாய விலைக்கடை ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம், வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசே உடனே தலையிட்டு, பொதுமக்களுக்கு நியாய விலை பொருட்கள் தங்கு தடையில்லாமல் வழங்குவதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை வாகன நிறுத்தத்தில் தமிழகத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றம் சென்று தமிழக அரசே நிலைநாட்ட வேண்டும்" என தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ஜி.கே.வாசன் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இதற்கு ஏற்றாற்போல், தமிழ் மாநில காங்கிரஸ் உரிய நேரத்தில் பொதுமக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.

undefined

உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து மேற்குவங்க சிபிஐ விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,

மேற்கு வங்க விவகாரத்தில் நீதிமன்றம் சில கோட்பாடுகளை விதித்துள்ளது. அதனை அம்மாநில அரசும் சிபிஐயும் முறையான வழிகாட்டுதலை பின்பற்றுவார்கள் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Intro:பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சின்னதம்பி யானையை கும்கி மாற்றாமல் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்

Body:தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக் கட்சியின் நிறுவனரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி கே வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி செய்தியாளர்களை சந்தித்த போது அவர் உடுமலைப்பேட்டையில் காட்டில் இருந்து வெளியே வந்து சுற்றித்திரியும் சின்னதம்பி யானை பொதுமக்களின் செல்லப்பிள்ளையாக மாறி உள்ளது ஆகவே பொது மக்களின் உணர்வுகளை மதித்து அந்த யானையை கும்கி மாற்றாமல் அரசு போதிய பாதுகாப்பு அளித்து பாதுகாப்பான முறையில் மீண்டும் வனப்பகுதிக்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதற்கு ஏற்றால் போல் தமிழ் மாநில காங்கிரஸ் உரிய நேரத்தில் பொது மக்களின் மனநிலையை அறிந்து கட்சி உறுப்பினர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில்

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழ் மாநில காங்கிரஸ் பொதுமக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்படும்.

மேலும் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.

காஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை வரவேற்கப்பட ஒன்று என்றாலும் இதில் சிறு மற்றும் குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை புறநகர் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி செயின் பறிப்பு சம்பவங்கள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது இதற்கு காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை உயர்கல்வித்துறை மூலமாகவும் சட்ட கல்வித்துறை மூலமாகவும் தமிழக அரசே நீதி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசே உடனே தலையிட்டு பொதுமக்களுக்கு நியாய விலை பொருட்கள் தங்கு தடையில்லாமல் வழங்குவதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை வாகன நிறுத்தத்தில் தமிழகத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் சென்று தமிழக அரசே நிலைநாட்ட வேண்டும்.

மேற்குவங்க விவகாரத்தில் நீதிமன்றம் சில கோட்பாடுகளை விதித்துள்ளது அதனை அம்மாநில அரசும் சிபிஐயும் முறையான வழிகாட்டுதலை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.