2016-17ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறை ஓட்டுநர்களுக்குப் புத்துணர்வுப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டது. மேலும், புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைச் செயல்படுத்த மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் திருச்சி, மதுரையில் ஓட்டுநர்களுக்குப் புத்துணர்வு பயிற்சி அளிக்க அம்மா ஓட்டுநர் பயிற்சி மையம் ஒரு கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தைச் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.