ETV Bharat / state

யாருக்கு ஜாதகம் சரியாக இருக்கிறது..? - கதை கூறி திமுகவினரை கலாய்த்த அமைச்சர்! - யாருக்கு ஜாதகம் சரியாக இருக்கிறது

சென்னை: இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பதிலுரையை முடித்தவுடன் குட்டி கதை ஒன்றைக் கூறி அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கினார்.

செல்லூர் ராஜு
author img

By

Published : Jul 3, 2019, 10:27 PM IST

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதிலுரையை முடித்தவுடன் குட்டி கதை ஒன்றைச் சொன்னார்.
”ஒருவர் தனது மகளுக்கு நீண்ட நாட்களாக வரன் பார்த்தார். உள்ளூர் ஜோதிடர் மற்றும் வெளியூர் ஜோதிடரை வைத்து வரன் தேடிக்கொண்டிருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த தரகர், மிக நீண்ட நடைப் பயணத்துக்குப் பிறகு ஒரே ஒரு ஜாதகம் கிடைத்துள்ளது. அதில் 10க்கு எட்டுப் பொருத்தம் உள்ளது எனக் கூறினார்.

பெண்ணின் தந்தைக்கு அந்த வரன் பிடிக்கவில்லை. ஆனால் மகளோ நீங்கள் நீண்ட நாட்களாக வரன் தேடி நொந்து நூல் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், எனவே இந்த வரனையே கட்டிக்கொள்கிறேன் என்று சொல்லி திருமணத்துக்குத் தயாராகினார்.

திருமண நாள் வந்தது, புரோகிதர் மந்திரம் சொல்லி, மாப்பிள்ளை கையில் பொரியை கொடுத்து ஓம குண்டத்தில் போடச் சொன்னார். மாப்பிள்ளையோ தன்னுடைய வாயில் போட்டுக்கொண்டார். உடனே புரோகிதர் அபிஷ்டு அபிஷ்டு பொறியை ஓம குண்டத்தில் போட வேண்டும் என சொன்னதுடன், மாப்பிள்ளை தன்னுடைய வாயிலிருந்த பொறியை எடுத்து ஓம குண்டத்தில் போட்டார், புரோகிதர் மீண்டும் அபிஷ்டு அபிஷ்டூ எனத் திட்டினார்.

தாலி கட்டிய நேரம் வந்தவுடன், புரோகிதர் மாப்பிள்ளை கையில் தாலியைக் கொடுத்துக் கட்ட சொன்னார், அதற்கு மாப்பிள்ளை, நான் எதைச் செய்தாலும் திட்டுகிறீர்கள். எனவே தாலியை நீ நீங்களே கட்டி விடுங்கள் எனச் சொன்னார். இதன் மூலம் என்ன தெரிய வருகிறது. மாப்பிள்ளைக்குச் சொல் புத்தியும் இல்லை, அடுத்தவர் சொல் கேட்டு நடக்கும் சொந்த புத்தியும் இல்லை என்பது தெளிவாகிறது. இப்படி தான் , பலருக்கு மணமகள் அமையும். ஆனால் கல்யாணம் மட்டும் நடக்காது. அடுத்து நாங்கள் தான் நாங்கள் தான் எனச் சொல்லுவார்கள். ஆனால் அது ஒருபோதும் பலிக்கவே பலிக்காது. பகல் கனவாகத் தான் முடியும் எனச் சொன்னார்.

இதற்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர். பின்னர் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், உங்களுக்குத் தவறான ஜோசியர் வரன் தேடியுள்ளார். 10க்கு 10 பொருத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மணமகள் செத்துப் போய்விடும். எனவே போகப் போகிறது நீங்கள் தான் எனப் பதில் அளித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர், உங்களுக்குத்தான் சாமி பக்தியும் இல்லை. ஜாதகத்தில் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் எங்களுக்கு சாமி பக்தியும் உள்ளது. ஜாதகத்தில் நம்பிக்கையும் உள்ளது. எங்களுக்கு எந்த பிரச்னையும் வராது எனச் சொன்னார்.

மீண்டும் குறுக்கிட்ட துரைமுருகன், ஜாதகம் எங்களுக்குப் பார்த்தோமோ இல்லையோ உங்களுக்குத் தான் பார்த்தோம் எனச் சொல்லிச் சிரித்தார்.

Intro:Body:யாருக்கு ஜாதகம் சரியாக இருக்கிறது _ கதை கூறி கடுப்பேற்றிய அமைச்சர்

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பதிலுரையை முடித்தவுடன் குட்டி கதை ஒன்றை சொன்னார்.

ஒருவர் தனது மகளுக்கு நீண்ட நாட்களாக வரன் பார்த்தார்.
உள்ளூர் ஜோதிடர் மற்றும் வெளியூர் ஜோதிடரை வைத்து வரன் தேடிக்கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த தரகர், மிக நீண்ட நடை பயணத்துக்கு பிறகு ஒரே ஒரு ஜாதகம் கிடைத்துள்ளது. அதில் 10 க்கு 8 பொருத்தம் உள்ளது என கூறினார். பென்ணின் தந்தைக்கு அந்த வரன் பிடிக்கவில்லை. ஆனால் மகளோ நீங்கள் நீண்ட நாட்களாக வரன் தேடி நொந்து நூல் ஆகி கொண்டிருக்கிறீர்கள், எனவே இந்த வரனையே கட்டிக்கொள்கிறேன் என்று சொல்லி திருமணத்துக்கு தயாராகினார்.

திருமண நாள் வந்தது, புரோகிதர் மந்திரம் சொல்லி, மாப்பிள்ளை கையில் பொறியை கொடுத்து ஓம குண்டத்தில் போட சொன்னார். மாப்பிள்ளையோ தன்னுடைய வாயில் போட்டுக்கொண்டார். உடனே புரோகிதர் அபிஷ்டு அபிஷ்டு பொறியை ஓம குண்டத்தில் போட வேண்டும் என சொன்னவுடன், மாப்பிள்ளை தன்னுடைய வாயில் இருந்த பொறியை எடுத்து ஓம குண்டத்தில் போடார், புரோகிதர் மீண்டும் அபிஷ்டு அபிஷ்டூ என திட்டினார்.

தாலி கட்டிய நேரம் வந்தவுடன், புரோகிதர் மாப்பிளை கையில் தாலியை கொடுத்து கட்ட சொன்னார், அதற்கு மாப்பிள்ளை, நான் எதை செய்தாலும் திட்டுகிறீர்கள், எனவே தாலியை நீ நீங்களே கட்டி விடுங்கள் என சொன்னார்.

இதன் மூலம் என்ன தெரிய வருகிறது, மாப்பிள்ளைக்கு சொல் புத்தியும் இல்லை, அடுத்தவர் சொல் கேட்டு நடக்கும் சொந்த புத்தியும் இல்லை என்பது தெளிவாகிறது.

இப்படி தான் , பலருக்கு மணமகள் அமையும், ஆனால் கல்யாணம் மட்டும் நடக்காது, அடுத்து நாங்கள் தான் நாங்கள் தான் என சொல்லுவார்கள் ஆனால் அது ஒருபோதும் பலிக்கவே பலிக்காது பகல் கனவாக தான் முடியும் என சொன்னார்.

இதற்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

பின்னர் பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், உங்களுக்கு தவறான ஜோசியர் வரன் தேடியுள்ளார். 10க்கு 10 பொருத்தமும் இருக்க கூடாது, அப்படி இருந்தால் மணமகள் செத்து போய்விடும். எனவே போக போகிறது நீங்கள் தான் என பதில் அளித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், உங்களுக்குத்தான் சாமி பக்தியும் இல்லை, ஜாதகத்தில் நம்பிக்கையும் கிடையாது, ஆனால் எங்களுக்கு சாமி பக்தியும் உள்ளது, ஜாதகத்தில் நம்பிக்கையும் உள்ளது, எங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என சொன்னர்.

மீண்டும் குறுக்கிட்ட துரைமுருகன், ஜாதகம் எங்களுக்கு பார்த்தோமோ இல்லையோ உங்களுக்கு தான் பார்த்தோம் என சொல்லி சிரித்தார்.

அவருக்கு பதிலளித்த முதலமைச்சர், எங்களுக்கு ஜாதகம் சரியாக இருப்பதால் தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், உங்களுக்கு ஜாதகம் சரியாக இல்லாததால் தான் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் நடுவில் தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என சொன்னதும், அதிமுகவினர் மேசையை தட்டி வரவேற்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.