தமிழ்நாட்டில் சில பகுதிகளில் வெயில் சதமடித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழ்நாட்டின் சில உள்மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டங்களில் மழை பெய்தது. இதில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையின் சில பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வெயில் நகரமான வேலூரிலும் கொடை மழை பெய்தது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக 100 டிகிரிக்கு மேல் அதிகபட்சம் 107 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், கோடை மழை மக்களை மகிழ்வித்தது.