தென்சென்னை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ”தென் சென்னை தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு முக்கிய பிரச்னையாக இருக்கிறது. போதிய நீர் வழங்கப்படுவதில்லை. அப்படியே வழங்கப்பட்டாலும் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. எனவே அதை முதலில் தீர்த்து வைப்பேன். பாதாள சாக்கடை திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை. அதனால் சாக்கடை தண்ணீரும், குடிநீரும் ஒன்றாக கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் கூறி வருகின்றனர். இதேபோல் மழைநீர் வடிக்கால் மற்றும் சேகரிப்பு வசதி இல்லை. எனவே இந்த மூன்று பிரச்னைகளும் தலையாய பிரச்னையாக எடுத்து சரி செய்து கொடுப்போம்.
தென் சென்னை தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக எம்.பி ஜெயவர்தன் எங்களுக்கு போட்டியே இல்லை. மாற்றத்திற்கான ஒரே தலைவர் டிடிவி என்று மக்களும், தொண்டர்களும் நினைக்கின்றனர். எனவே எங்களுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது. டிடிவி தலைமையிலான 40 மக்களவை உறுப்பினர்களும் இது போன்ற காரியத்தை ஒரு போதும் செய்ய மாட்டோம்.
திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகின்றனர். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் போட்டியிடுகிறேன். எனவே சுலபமான வெற்றியாக இது இருக்கும். மே 23 அன்று பாருங்கள் டிடிவி என்பதே தமிழகம் எங்கும் ஒலிக்கும்” என்று தெரிவித்தார்.