ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆன்மீக சுற்றுப்பயணமாக கடந்த ஆண்டு திருவண்ணாமலை வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, விடுதி நிர்வாகி பாரதி என்பவரால் பாலியில் வன்புணர்வுக்கு உள்ளானதா அப்பெண் புகாரளித்தார். இதுகுறித்து திருவண்ணாமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாரதி, அவரது சகோதரர் நீலகண்டன் உள்பட பலரை கைது செய்தனர்.
இந்நிலையில், நீலகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண் ரஷ்யாவுக்கு திரும்பிவிட்டதாகவும், அவர் இன்னும் முழுமையாக சாட்சியம் அளித்து முடிக்கவில்லை என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் சாட்சியம் அளிக்க அவர் மீண்டும் இந்தியா வருவாரா? அவ்வாறு வருவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்? நேரில் ஆஜராகும்படி அவருக்கு எப்படி சம்மன் அனுப்ப முடியும்? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.