நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நடிகர் ராதாரவி திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.