ETV Bharat / state

தயாநிதி மாறன் மீது அதிமுக புகார் - அதிமுக

சென்னை: மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம்பால் மீது அவதூறு பரப்பும் வகையில் தவறான வீடியோவை பரப்பி வருவதாக தயாநிதிமாறன் மீது அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

BG
author img

By

Published : Apr 17, 2019, 11:15 PM IST

மத்திய சென்னையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக கட்சி வேட்பாளராக சாம்பால் போட்டியிடுகிறார். அவரைப்பற்றி அவதூறு பரப்பும் வகையில் வீடியோ ஒன்றை சித்தரித்து திமுக ஐடி விங்க் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக தற்போது அதிமுக புகார் தெரிவித்துள்ளது. மக்களை திசைத் திருப்பும் நோக்கத்தோடு இந்த வீடியோவை வெளியிட்ட தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக புகார் தெரிவித்துள்ளது. மத்திய சென்னை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா புகாரை அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தயாநிதி மாறன் தோல்வி பயத்தில் இதுபோன்ற தவறான சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பரப்பி வருகிறார். அவருக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் நேர்மையான முறையில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளோம், அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார்.

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம்பால் மீது அவதூறு பரப்பும் வகையில் தவறான வீடியோ ஒன்றை சித்தரித்து திமுக ஐடி விங்க் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக புகார். 

 மக்களை திசைத் திருப்பும் நோக்கத்தோடு இந்த வீடியோவை வெளியிட்டதாக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய சென்னை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா புகார் அளித்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

தயாநிதி மாறன் தோல்வி பயத்தில் இது போன்ற தவறான சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பரப்பி வருகிறார் அவருக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் நேர்மையான முறையில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளோம் , நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.