ETV Bharat / state

ஜீயருக்கு கிருஷ்ணர் தண்டனை வழங்கவேண்டும் - கே.எஸ்.அழகிரி - Mahatma

சென்னை: காந்தியை கொலைசெய்த கோட்சேவை நியாயப்படுத்திய மன்னார்குடி ஜீயருக்கு பகவான் கிருஷ்ணர் மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டுகிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை விடுத்துள்ளார்.

கே.எஸ். அழகிரி
author img

By

Published : May 18, 2019, 9:17 AM IST

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ஒரு ஹிந்து என கருத்து தெரிவித்தது நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும், ஆதரவும் தெரிவித்துவந்தனர். அந்தவகையில்,கமலின் கருத்துக்கு மன்னார்குடி ஜீயரும் கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், கோட்சேவும் தேசபக்கதன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'மன்னார்குடி ஜீயர், கோட்சே தேசப்பற்றின் காரணமாகத்தான் மகாத்மா காந்தியை கொன்றார் என்று கூறியுள்ளார். ஜீயரின் கருத்து என்னை அதிர்ச்சியடைய வைத்தது. ஸ்ரீ கிருஷ்ணருடைய மறு அவதாரமாக அவரை நான் பார்க்கிறேன்.

மகாத்மா காந்தியையும், கோட்சேவையும் ஜீயர் ஒன்றுப்படுத்தி பேசியதை படித்தபோது நான் அதிர்ச்சியடைந்து, இந்த செய்தியை படிக்க நேரிட்டதே என்று வருந்தி என்னுடைய இரண்டு கண்களையும் பிடுங்கி எறிந்து விடலாமா என்றுகூட யோசித்தேன். மதநம்பிக்கை என்பது வேறு, ஆனால் அந்த நம்பிக்கையை வேறு ஒருவர் மீது திணிப்பது என்பது வேறு. இந்த காரியத்தை எந்த மதத்தினர் செய்தாலும் அவர்களை காங்கிரஸ் எதிர்க்கும்.

இந்து மதத்தின் சிறப்பே சகிப்புத் தன்மைதான். அதற்கு மாறாக ஜீயர் போன்றவர்கள் இத்தகைய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற கருத்துக்களை கூறி சமூக அமைதியை சிதைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.மிகவும் சிக்கலான தத்துவக் கொள்கையையே புரிந்து வைத்திருக்கிற ஜீயரால் இந்த எளிய உண்மையை எவ்வாறு புரிந்து கொள்ள முடியவில்லை. அவருடைய கண்களை எது மறைத்தது ? ஜீயரும் ஏதாவது ஒரு நிர்ப்பந்தத்திற்கு அடிபணிகிறாரா ?

நான் மகாத்மா காந்தியினுடைய வாழ்க்கையாலும், இந்து மதத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையாலும், அதே நேரத்தில் அவருடைய மதச்சார்பற்ற தன்மைகளாலும் கவரப்பட்ட ஒரு உண்மையான வைஷ்ணவன். மகாத்மா காந்தியின் கொலையை நியாயப்படுத்தி ஜீயர் சொன்னது என்னை மட்டுமல்ல, இந்து மதத்தைச் சார்ந்த அனைவரையும், மனிதகுலத்தின் மீது அன்பு வைத்திருக்கிற எல்லோரையும் மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. இந்த செயலை ஜீயர் தவிர்த்திருந்தால் அவருக்கு மிகுந்த பெருமை சேர்த்திருக்கும். மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்தியதற்காக ஸ்ரீ கிருஷ்ணபிரான் அவருக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

*மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்தியதற்காக மன்னார்குடி ஜீயருக்கு   கிருஷ்ணர்  மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டுகிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை*

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ஒரு ஹிந்து என கருத்து தெரிவித்தது நாடு முழுவதும் பல்வேறு அதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும், ஆதரவும் தெரிவித்து வந்தனர். 

கமலின் கருத்துக்கு மன்னார்குடி ஜீயர் கடும் கண்டனம் தெரிவித்தார். அதனோடு காந்தியும், கோட்சேவும் தேசபற்றாளர்கள் என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜீயரின் கருத்து தன்னை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது என அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவரது அறிக்கையில், மன்னார்குடி ஜீயர் அவர்கள் மகாத்மா காந்தி அவர்களும், கோட்சேவும் தேசப்பற்றுள்ளவர்கள்; தேசப்பற்றின் காரணமாகத் தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்று சொல்லியுள்ளார். எம்பெருமான் ஜீயர் அவர்களின் கருத்து; என்னை அதிர்ச்சியடைய வைத்தது. ஸ்ரீ கிருஷ்ணருடைய மறுஅவதாரமாக அவரை நான் பார்க்கிறேன். 
இதுவரை இந்திய அரசியலில் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை, ஜனசங்கம், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் கூட மகாத்மா காந்தியையும், கோட்சேவையும் ஒன்றுபடுத்தியது கிடையாது. காந்தியின் கொலையை நியாயப்படுத்தியது கிடையாது. ஆனால் எம்பெருமான் ஜீயர் அவர்கள் இதனை நியாயப்படுத்தியிருக்கிறார்.

மகாத்மா காந்தியையும், கோட்சேவையும் ஜீயர் ஒன்றுபடுத்தி பேசியதை படித்த போது நான் அதிர்ச்சியடைந்து, இந்த செய்தியை படிக்க நேரிட்டதே என்று வருந்தி என்னுடைய இரண்டு கண்களையும் பிடுங்கி எறிந்து விடலாமா என்று கூட யோசித்தேன். 

மதநம்பிக்கை என்பது வேறு, ஆனால் அந்த நம்பிக்கையை வேறு ஒருவர் மீது திணிப்பது என்பது வேறு. இந்த காரியத்தை எந்த மதத்தினர் செய்தாலும் அவர்களை காங்கிரஸ் எதிர்க்கும். 

இந்து மதத்தின் சிறப்பே சகிப்புத் தன்மை தான். அதற்கு மாறாக ஜீயர் போன்றவர்கள் இத்தகைய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற கருத்துக்களை கூறி சமூக அமைதியை சிதைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
தேசப்பற்றின் காரணமாக மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்று ஜீயர் சொல்கிறார். அப்படி என்றால் கோட்சே இந்த தேசத்தை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டாரா ? அவர்கள் மீது கோபம் கொண்டாரா ? ஆனால் இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக உழைத்த மகாத்மா காந்தியை கொல்கிறார் என்று சொன்னால் அதில் தேசப்பற்று எங்கே இருக்கிறது ? மிகவும் சிக்கலான துவைதம் கொள்கையையே புரிந்து வைத்திருக்கிற ஜீயரால் இந்த எளிய உண்மையை எவ்வாறு புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று ? அவருடைய கண்களை எது மறைத்தது ? ஜீயரும் ஏதாவது ஒரு நிர்ப்பந்தத்திற்கு அடிபணிகிறாரா ? 

அழகிரி ஆகிய நான், மகாத்மா காந்தியினுடைய வாழ்க்கையாலும், இந்து மதத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையாலும், அதே நேரத்தில் அவருடைய மதச்சார்பற்ற தன்மைகளாலும் கவரப்பட்ட  ஒரு உண்மையான வைஷ்ணவ இந்து நான். மகாத்மா காந்தி அவர்களுடைய கொலையை நியாயப்படுத்தி ஜீயர் அவர்கள் சொன்னது என்னை மட்டுமல்ல, இந்து மதத்தைச்சார்ந்த அனைவரையும், மனிதகுலத்தின் மீது அன்பு வைத்திருக்கிற எல்லோரையும் மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. இந்த செயலை ஜீயர் அவர்கள் தவிர்த்திருந்தால் அவருக்கு மிகுந்த பெருமை சேர்த்திருக்கும். 
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்தியதற்காக ஸ்ரீ கிருஷ்ணபிரான் அவருக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டுகிறேன். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.