தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இதில் பூந்தமல்லி தனி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் செம்பரபாக்கம் பகுதியை சேர்ந்த பாரதி பிரியா, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கைக்குழந்தையுடன், அரசு அலுவலகத்திற்கு இன்று வந்தார். பாரதிபிரியா 2 மணி நேரம் காத்திருந்து மாலை 5 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வேடப்பு மனுவில் தனக்கு சொந்த வாகனம், கையிருப்பு ஏதும் இல்லை எனவும் அசையா சொத்தாக 2லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.