தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் மக்கள் குறைகள் கேட்டறியும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிட்ம் பேசிய அவர், “அஞ்சல் துறையில் அந்தெந்த பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். துறை ரீதியான அலுவலர்கள் கேட்டுக் கொண்டதால்தான் இந்தி மொழி பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதற்கும் அமைச்சகத்துக்கும் சம்பந்தம் இல்லை.
திருமயத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்குள்ளும் நிலை ஏற்பட்டதால் ரயில்வே துறையினர் கேட்டு கொண்டதால் தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 2016 ஆம் ஆண்டு அஞ்சல் துறை தேர்வில் நடைபெற்ற முறைகேட்டில் தமிழர் அல்லாதோர் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். எனவே தான் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
ராஜபக்சே குற்றவாளி என்று வைகோ கூறுகிறார். அந்த ராஜபக்சேவுக்கு துணை போன காங்கிரஸ் குற்றவாளி. அந்த காங்கிஸ் உடன் கூட்டணி வைத்துள்ள திமுக ஒரு குற்றவாளி. அவர்களோடு கூட்டு வைத்த வைகோ ஒரு குற்றவாளி. வைகோ தான் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்து பேச வேண்டும். பாராளுமன்றத்தில் நுழையமுடியாத தார்மீக குற்றவாளி வைகோ. ஆளும்கட்சியாக கூட்டணி ஆட்சியை நடத்தியபோது ஈழத் தமிழர்களை காக்க முடிவியல்லை என்றால் ஆளும்கட்சியாக இருப்பதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதற்கு தான் திமுகவுக்கு தகுதி இருக்கிறது. துர்கா ஸ்டாலின் அத்திவரதரை தரிசித்திருப்பது, குடும்பமே ஸ்டாலினை புறக்கணிக்கிறது என்றுதான் கூற வேண்டும் எனத் தெரிவித்தார்.