தமிழ்நாட்டில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடந்தது. இதில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் வென்றது.
இதில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை காலை 11 மணிக்கு சபாநாயகர் அறையில் பதவியேற்க உள்ளனர். நாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் பதவி ஏற்று கொள்கின்றனர்.
இந்நிலையில் வெற்றி பெற்றுள்ள 22 எம்எல்ஏக்களின் பெயர்களும் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.