ETV Bharat / state

ஜூன் 3 முதல் பிளஸ்டூ மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்! - 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்கான தேதி அறிவிப்பு

சென்னை: "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் வழங்கப்படும்" என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

12th Mark statement issue on 3rd june
author img

By

Published : May 31, 2019, 7:34 PM IST

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில், "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு உட்பட) அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஜூன் 3ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம். 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும். தேர்ச்சி அடையாதவர்களுக்கு தேர்ச்சி அடைந்த பின்னரே சான்றிதழ் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

12 ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்
சென்னை,
12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 3 ந் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 12 ம் வகுப்பு மார்ச்  பொதுத் தேர்வெழுதிய பள்ளி
மாணவர்களுக்கு  11,12 ம் வகுப்பு  அசல்
மதிப்பெண் சான்றிதழ்களை (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு உட்பட) அந்தந்த பள்ளித்
தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு
மையங்கள் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூன் 3 ந் தேதி
 முதல் பெற்றுக்கொள்ளலாம்.
11 மற்றும் 12 ம் வகுப்பு  பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், 11 ம் வகுப்பு  600 மதிப்பெண்கள்  மற்றும்12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான 600 மதிப்பெண்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும்.
11,12 ம் வகுப்பு   பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத
மாணவர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு
செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக  வழங்கப்படும். இந்த மாணவர்கள் 11,12 ம் வகுப்பு ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே,
அவர்களுக்கு   இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள்
வழங்கப்படும் என அதில் கூறியுள்ளார். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.