ETV Bharat / state

11ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வினை எழுதுவதற்கு நாளை முதல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

11ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு
author img

By

Published : May 9, 2019, 9:10 PM IST

தமிழ்நாடு புதுச்சேரியில் நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தமாக 95 சதவிகித மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு துணைத் தேர்வினை எழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்களுக்காக அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 14.6.2019 முதல் 21.6.2019 வரை நடைபெறவிருக்கும் சிறப்புத் துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 10.5.2019 முதல் 14.5.2019 வரை ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், தனியார் இணையதள சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  11 ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு 
நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 

சென்னை, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வினை எழுதுவதற்கு நாளை முதல்  14 ந் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  11 ம் வகுப்பு  மார்ச் 2019  பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகை புரியாதவர்கள் 14. 6.2019  முதலர்  21. 6.2019 வரை நடைபெறவிருக்கும் சிறப்புத் துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். 
விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்  மற்றும் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 10. 5.2019  
 மதியம்  முதல் 14. 5.2019  மதியம் 5.45 மணி வரை ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 தனியார் இணையதள சேவை மையங்களின்  மூலம் விண்ணப்பிக்க இயலாது.
 
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து
கொள்ளலாம்.
தேர்வர்களுக்குத் தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும்
தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு
செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.