அரியலூர் மாவட்டத்தில் சகோதரர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆவேசமடைந்த மூத்த சகோதரன் தனது தம்பியின் தலையில் குழவிக்கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.
ஏன் தகராறு?
இளைய சகோதரன் அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட மூத்த சகோதரன் 'ஏன் உன் மனைவியிடம் தகராறு செய்கிறாய்' என்று கேட்டதற்கு இளையோன், 'உன் வேலையைப் பார்' என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்துதான் சகோதரர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளது.
அண்ணன் கைது
இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த காவல் துறையினர் அவ்விடத்தை ஆய்வுசெய்து இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மூத்த சகோதரனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்..
விசாரணையில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனியைச் சேர்ந்த துரைசாமியின் மூத்த மகன் பழனிவேல் என்பதும், இளையமகன் ஆறுமுகம் என்பதும் தெரியவந்தது. இதில் ஆறுமுகம் சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்துவந்தார்.
இதையும் படிங்க: மணல் திருட்டு குறித்து தகவலளித்ததாக நபர் மீது கொலைவெறித் தாக்குதல்