ETV Bharat / state

இருவேறு கோயில்களில் திருடப்பட்ட உண்டியல் காணிக்கை - அரியலூர் மாவட்டம்

அரியலூர்: திருமானூர் அருகே கீழகொளத்தூர் கிராம பெருமாள், திரௌபதி அம்மன் கோயில்களில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

Two temples hundi amount theft
Two temples hundi amount theft
author img

By

Published : Aug 21, 2020, 3:27 AM IST

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழக்கொளத்தூர் கிராமத்தில் பெருமாள் கோயில், திரௌபதி அம்மன் கோயில் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் சென்ற பொது மக்கள், விநாயகர் கோயிலில் விளக்கு ஏற்றியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கோயிலை பார்த்தால் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பெருமாள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

மேலும் திரௌபதி அம்மன் கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பொருள்களும் திருடப்பட்டிருந்தது. இதில் பெருமாள் கோயில் உண்டியல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரித்து காணிக்கை பொருள்களை எடுத்தனர். அதே போல் திரௌபதிஅம்மன் கோயில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உண்டியல் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், இதில் ஒரு லட்சம் மதிப்பிலான காணிக்கை பொருள்கள் திருடப்பட்டிருக்கலாம் என பொது மக்கள் கூறுகின்றனர். இது குறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், துப்பறியும் நாய் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.