ETV Bharat / state

பாரம்பரிய விதைகளை காப்போம் காக்க நடைபெற்ற கருத்தரங்கம்! - seed fest

அரியலூர்: தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பாக பாரம்பரிய நாட்டு விதைகளை காப்போம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்கம் நடைபெற்றது.

பாரம்பரிய நாட்டு விதை திருவிழா
author img

By

Published : Aug 18, 2019, 7:04 PM IST

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் ’பாரம்பரிய நாட்டு விதைகளைக் காப்போம்’ என்ற தலைப்பில் இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு இயற்கை ஆளுநர்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த கருத்தரங்கில் மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா ,சீரகச் சம்பா, இலுப்பைப் பூ சம்பா ,கருப்புகவுனி, செவ்வக முனி கம்பு, தினை ,குதிரைவாலி ,சாமை, வரகு, கேழ்வரகு, எள், துவரை, காய்கறி, கீரை உள்ளிட்ட விதைகளும், இயற்கை முறையில் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையும் நடைப்பெற்றது.

நம்மாழ்வாரை நினைவூட்டும் நாட்டு விதைத் திருவிழா

மேலும் இயற்கை விதை பொருட்களுக்கு வறட்சி காலங்களையும் , வெப்பமான காலங்களைலயும் தாங்கிக் கொள்ளும் குணம் உள்ளது என இயற்கை வல்லுநர்கள் கருத்தரங்கில் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிகள் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் ஆர்வமாக கலந்து கொண்டு பல்வேறு விதைகளை வாங்கி சென்றனர்.

Intro:அரியலூரில் பாரம்பரிய நாட்டுக் விதை திருவிழா

Body:தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் அரியலூரில் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நாட்டு விதைகளை நடுவோம் விதைகளை காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் பட்டிமன்றம் இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் பல்வேறு இயற்கை ஆளுநர்கள் எடுத்துக் கூறினார் மேலும் விவசாயிகளின் சந்தேகங்களையும் அதற்கான தீர்வுகளையும் எடுத்துக் கூறினார் விழாவின் முக்கிய பங்காக விதைகளின் பகிர்வு அதாவது மாப்பிள்ளை சம்பா கிச்சடி சம்பா சீரகச் சம்பா இலுப்பைப் பூ சம்பா கருப்புகவுனி செவ்வக முனி கம்பு தினை குதிரைவாலி சாமை வரகு கேழ்வரகு எள் துவரை காய்கறி கீரை உள்ளிட்ட விதைகளும் இயற்கையில் விதிக்கப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையும் நடைப்பெற்றது நெகிழியை தவிர்க்க துணிப்பை விநியோகமும் பசுமை நூல்கள் இயற்கை இடு பொருட்களான அவிட்டம் மூலிகை பூச்சிவிரட்டி மீன் அமிலம் போன்ற பொருட்களும் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்க படுகின்றன
மேலும் இயற்கை விதை பொருட்கள் நமது நாட்டிற்கு அதாவது கடுமையான வறட்சி காலங்களிலும் வெப்பமான காலங்களிலும் தாங்கிக் கொள்ளும் குணம் படைத்தவை தற்போது நாம் உண்ணும் உணவு பொருட்கள் ஹைப்ரிட் செய்யப்பட்ட கையால் புது வகையான நோய்கள் உருவாகின்றன இதனை தவிர்க்க நம் மரபுசார்ந்த விதைகளை விதைத்து உண்ணும்போது வலிமையாகவும் நோயின்றி வாழலாம் என இயற்கை வல்லுநர்கள் தெரிவித்தனர்

Conclusion:இந்நிகழ்ச்சிகள் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் ஆர்வமாக கலந்து கொண்டு பல்வேறு விதைகளை வாங்கி சென்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.