ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top ten news  top ten  top news  top ten news at 9 am  tamil nadu news  tamil nadu latest news  latest news  news update  morning news  தமிழ்நாடு செய்திகள்  செய்திச் சுருக்கம்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  காலை செய்திகள்
செய்தி சுருக்கம்
author img

By

Published : Nov 13, 2021, 9:01 AM IST

1. மழையின் போது மட்டுமல்ல, மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும்- கமல்ஹாசன்

மழை வெள்ள பாதிப்பின் போது மட்டும் மக்களுக்கு உதவாமல் தொடர்ந்து மக்களுக்கான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

2. மழை. வெள்ளம் - நிவாரண உதவிகள் வழங்கிய ஈபிஎஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

3. சென்னை பெருவெள்ளம்: மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

மழை வெள்ளத்தில் சிக்கிய இடங்களை கண்காணித்து அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்காக தண்ணீரில் மிதக்கும் அதி நவீன டிரோன் கேமராவை காவல் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

4. பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு - மதுரையில் பரபரப்பு

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ரவுடி குருவி விஜய் என்பவரை, காவல் துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். மதுரையில் அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

5. சென்னை கனமழை - மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

சென்னையில் கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

6. பள்ளிகளில் பஞ்சாபி கட்டாயம், மீறினால் அபராதம்!

பஞ்சாப் மாநிலத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பஞ்சாபி கட்டாயம் என அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அதிரடியாக அறிவித்துள்ளார்.

7. நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா- பிபின் ராவத்!

நாட்டின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat) எச்சரித்துள்ளார். மேலும், “சீனா எல்லை மீறவில்லை, தனது எல்லைப் பகுதியில் கிராமங்களை கட்டுகிறது” என்றார்.

8. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 'பீஸ்ட்' பட செட்

சென்னையில் பெய்த கனமழையால் 'பீஸ்ட்' படத்திற்காகப் போடப்பட்டிருந்த செட் பாதிப்படைந்துள்ளது.

9. பாதிக்கப்பட்ட பார்வதியம்மாவுக்கு உதவுங்கள் - சூர்யாவுக்கு சிபிஎம் கடிதம்

ஜெய்பீம் படத்தின் வெற்றி எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

10. HBD சுசீலா அம்மா

பிரபல பின்னணி பாடகியான பி. சுசீலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.