ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top ten news at 1 pm  top ten news  top ten  top news  latest news  tamil nadu news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  அண்மை செய்திகள்
செய்தி சுருக்கம்
author img

By

Published : Nov 11, 2021, 1:43 PM IST

1. சென்னையில் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2. 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில் இன்று காற்றழுத்த தழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளதால் ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

3. சென்னையில் அமைச்சர் வீடு அருகே வெள்ளம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீடு அருகே வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் படகில் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

4. 💰மின் கட்டணம் செலுத்த அவகாசம்?💡

தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

5. நான்கு நாள்களுக்கு டாஸ்மார்க் மூடல்

திருவண்ணாமலையில் வரும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

6. முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை : அமைச்சர்கள் அடங்கிய குழு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அரசு உயர் அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

7. தமிழ்நாடு முழுவதும் 1,150 நடமாடும் மருத்துவ வாகனம் தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் 1,150 நடமாடும் மருத்துவ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9. விளம்பரத்தால் அல்லு அர்ஜுனுக்கு அரசு தரப்பில் வந்த புதிய சிக்கல்

தெலங்கானா அரசு பேருந்துகளை அவமதிக்கும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் விளம்பரத்தில் நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

10. விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் - சிக்கிய ஹைதராபாத் மென் பொறியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டகாரர் விராட் கோலியின் 10 மாத மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சைபர் கிரைம் காவல் துறையினர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது மென் பொறியாளரை கைது செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.