அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னபட்டக்காடு ஊராட்சியில் கீழஎசனை கிராமத்திலுள்ள நடுநிலைப்பள்ளியில் நான்காவது வார்டிற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
அப்போது பள்ளிக்கட்டடத்தின் முன்பகுதியிலுள்ள முகப்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் வாக்குப்பதிவு செய்ய காத்திருந்த மூன்று பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.
காயமடைந்த பெண்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருமானூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வாக்குப்பதிவு செய்ய காத்திருந்த பெண்கள் மீது பள்ளியின் மேற்கூறை பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதுமையிலும் ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி!