கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பலரும் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு அரசை எதிர்பார்த்துவருகின்றனர்.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மக்களுக்கு தங்களாலான உதவிகளை செய்துவருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவின் சொந்த கிராமமான தாமரைக்குளத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக ஐநூறு குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் தாமரைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவரும் ஊராட்சி மன்றத்தலைவர் குழு கூட்டமைப்பு மாவட்டத் தலைவருமான பிரேம்குமார் மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்
இதையும் படிங்க: கரோனா வைரஸ் நிவாரணப் பொருள்கள் பிரித்தெடுக்கும் பணி: அமைச்சர் ஆய்வு