ETV Bharat / state

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

அரியலூர்: தீயனூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

people protest
author img

By

Published : Oct 17, 2019, 3:05 PM IST

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ளது உடையவர் தீயனூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவின்பேரில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டபோது, விக்கிரமங்கலத்தில் இருந்த டாஸ்மாக் கடை உடையவர் தீயனூர் மாற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையானது செங்குழி பெருமாள், தீயனூர் மலை மேடு பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது.

கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்

இதனால், இப்பகுதிக்கு பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் டாஸ்மாக் கடையில் குடிப்பவர்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் தாய்மார்கள் பலர் தங்களது கணவரை இழந்து தவித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சிலரும் போதைக்கு அடிமையானதால் கடையை மாற்றக் கோரி தீயனூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்

இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெகுண்டெழுந்த அக்கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி மோகன்தாஸ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் டாஸ்மாக் கடையை அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் மக்களிடம் தெரிவித்த பின்னரே சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரியில் ஐந்து நாட்களாக ஓட்டை போட்ட கொள்ளையர்கள் - திருச்சி ஆணையர்

Intro:அரியலூர் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Body:அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ளது உடையவர் தீயனூர் கிராமம் இக்கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கூத்து உத்தரவின்பேரில் நெடுஞ்சாலையில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு போது விக்கிரமங்கலம் இருந்த கடை உடையவர் தீயனூர் மாற்றப்பட்டது டாஸ்மார்க் கடை யானது செங்குழி பெருமாள் தீயனூர் மலை மேடு பட்டா கட்டாங்குறிச்சி செல்லும் சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது இதனால் இப்பகுதிக்கு பள்ளி கல்லூரிக்கு க்கு செல்லும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் டாஸ்மாக் கடையில் குடிப்பவர்லால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் மேலும் தாய்மார்கள் பலர் தங்களது கணவரை இழந்த குடும்பம் நடத்துவதற்கு இயலாத சூழ்நிலை உள்ளது பள்ளி மாணவர்கள் சிலரும் போதைக்கு அடிமையானதால் கடையை மாற்ற கோரி பலமுறை பலரிடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது

Conclusion:சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி மோகன்தாஸ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் பொதுமக்களும் டாஸ்மாக் கடையை அகற்ற மட்டுமே சாலை மறியல் விலக்கிக் கொள்வோம் என தெரிவித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.