ETV Bharat / state

அரியலூரில் சுரங்கப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!

அரியலூர்: தமிழ்நாட்டில் உள்ள 571 சுரங்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தென்மண்டல சுரங்க பாதுகாப்பு உதவி இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.

Subway mines-safety
author img

By

Published : Sep 10, 2019, 10:56 AM IST

தென்னிந்திய அளவிலான 59ஆவது சுரங்க பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனையொட்டி நெய்வேலி பழுப்பு அனல்மின் நிலையம், ராம்கோ, டால்மியா, செட்டிநாடு சிமெண்ட் மற்றும் பல்வேறு சுரங்கத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் சுரங்க பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை அலுவலர்கள், சுரங்கங்களில் பணிபுரியம் ஊழியர்கள் பலர் பார்வையிட்டனர். அப்போது விபத்தில்லாமல் சுரங்கத்தில் பணியாற்றுவது எப்படி, தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

இதில், தென்மாநில சுரங்க பாதுகாப்பு உதவி இயக்குநர் விஜயகுமார், சென்னை மண்டல சுரங்க பாதுகாப்பு இயக்குநர் புஷன் பிரசாத்சிங், உதவி இயக்குநர் ரகுபதிபேடி ரெட்டி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சுரங்கங்களில் பாதுகாப்பாக பணியாற்றுவது குறித்து விளக்கமளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தென்மாநில சுரங்க பாதுகாப்பு உதவி இயக்குநர் விஜயகுமார், சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய சுரங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் 12நாட்கள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 571 சுரங்கங்கள் பதிவுசெய்து செயல்பட்டு வருகின்றன.

சுரங்க பாதுகாப்பு விழிப்புணர்வு

இச்சுரங்கங்களை கண்காணிக்க மத்திய சுரங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் குழுவினர் சுரங்கங்களை ஆய்வுசெய்து வருகின்றனர். இதனால், விபத்துகள் பெருமளவில் குறைந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Intro:அரியலூர் -& தமிழகத்தில் உள்ள 571 சுரங்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தென்மண்டல சுரங்க பாதுகாப்பு உதவி இயக்குநர் விஜயகுமார் பேச்சுBody:.

அரியலூர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 59வது தென் இந்திய அளவிலான சுரங்க பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.. இதனையொட்டி நெய்வேலி பழுப்பு அனல்மின் நிலையம், ராம்கோ, டால்மியா, செட்டிநாடு சிமெண்ட் மற்றும் பல்வேறு சுரங்கத்தை பயன்படுத்தம் நிறுவனங்கள் சுரங்க பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த கண்காட்சியை அதிகாரிகள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரியம் ஊழியர்கள் பார்வையிட்டனர். அப்போது விபத்தில்லாமல் சுரங்கத்தில் பணியாற்றுவது எப்படி, தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துது குறித்து விளக்கினர். இதனையொட்டி நடைபெற்ற விழாவில் தென்மாநில சுரங்க பாதுகாப்பு உதவி இயக்குநர் விஜயகுமார், சென்னை மண்டல சுரங்க பாதுகாப்பு இயக்குநர் புஷன் பிரசாத்சிங், உதவிஇயக்குநர் ரகுபதிபேடி ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சுரங்கங்களில் பாதுகாப்பாக பணியாற்றுவது குறித்து விளக்கமளித்தனர். பாதுகாப்பை நல்லமுறையில் நடைமுறைப்படுத்தும் சிறந்த நிறுவனங்களுக்கு பாராட்டு பதக்கங்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சுரங்கப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென்மாநில சுரங்க பாதுகாப்பு உதவி இயக்குநர் விஜயகுமார், சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய சுரங்க பாதுகாப்பு அமைசசகத்தின் சார்பில் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் 12நாட்கள் வழங்கிய பிறகே அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். தமிழ்நாட்டில் 571 சுரங்கங்கள் பதிவுசெய்து செயல்பட்டு வருகிறது. இச்சுரங்கங்களை கண்காணிக்க மத்திய சுரங்க பாதுகாப்பு அமைசசகத்தின் கீழ் ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு குழுவினர் சுரங்கங்களை ஆய்வுசெய்து வருகின்றனர். இதனால் விபத்துக்கள் பெருமளவில் குறைந்து வருகிறது. .Conclusion:கைவிடப்பட்ட சுரங்கங்களை மாநில அரசிடம் ஒப்படைத்தல், அல்லது அச்சுரங்கங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.