அரியலூரில் ஒரே வளாகத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கூடத்தின் சத்துணவு கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அரியலூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்தது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.