ETV Bharat / state

அரியலூரில் கொள்ளைபோன ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு

அரியலூர்: பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், வெள்ளி பொருட்களை காவல்துறையினர் மீட்டனர்.

திருட்டு நகைகள் மீட்பு
author img

By

Published : Jul 2, 2019, 7:14 PM IST

அரியலூர் புற வழிச்சாலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் சென்றனர். அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், செந்துறை, கீழப்பழுவூர், தூத்தூர், விக்கிரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், செந்துறை, கீழப்பழுவூர், தூத்தூர், விக்கிரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 சவரன் நகைகள், விக்கிரமங்கலம் அருகே கருப்பசாமி கோயில் உண்டியல், சுவாமியின் வெள்ளி கலசங்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருட்டு நகைகள் மீட்பு

காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை திறமையாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்ததை பாராட்டி, காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் அவர்களுக்கு சன்மானம் வழங்கினார்.

Intro:அரியலூர் - பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 3 லடசம் மதிப்பாலான நகைகள் மற்றும் சுவாமி வெள்ளி கவசங்கள் மீட்பு- 2 பேர் கைதுBody:அரியலூர் புறவழிச்சாலையில் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த இருவர் சந்தேகத்திற்கிடமாக இருப்பதைக் கண்டு போலீசார் அவரிடம் விசாரணை ஈடுபட்டுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் விஜயபாஸ்கர் மற்றும் சுரேஷ் என தெரியவந்தது.

இவர்கள் செந்துறை, கீழப்பழுவூர், தூத்தூர், விக்கிரமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி என போலீசாருக்கு தெரியவந்தது.

அதனை அடுத்த நடைபெற்ற விசாரணையில் மேற்கண்ட இடங்களில் திருடப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான 14 சவரன் நகைகள் மற்றும் விக்கிரமங்கலம் அருகே கருப்பசாமி கோவிலில் உண்டியல் மற்றும் சுவாமியின் வெள்ளி கலசங்கள் திருடியது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த குற்ற சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டி சன்மானம் வழங்கினார்.

.Conclusion:குற்றவாளிகள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.