ETV Bharat / state

பொங்கல் பரிசில் தேங்காய் வேண்டும்: இளநீருடன் வந்து பாஜக ஆர்ப்பாட்டம் - தேங்காய் வழங்க கோரி இளநீரை வைத்து போராட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்க கோரி இளநீரை வைத்து பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jan 5, 2023, 1:53 PM IST

பாஜக ஆர்ப்பாட்டம்

அரியலூர்: பொங்கல் பரிசு தொகுப்பில் இரண்டு தேங்காய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (ஜன.5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவினர் தேங்காய்க்கு பதிலாக இளநீரை கையில் கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது நகைச்சுவையை ஏற்படுத்தியது.

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு, ரூபாய் ஆயிரம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதை ஒட்டி டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பொங்கல் பரிசு தொகுப்பில் இரண்டு தேங்காய்களை சேர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் 25 பேர், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 12:30 மணி அளவில் தான் மாவட்ட தலைவர் ஐயப்பன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்தார். அவரோடு ஒரு வாகனத்தில் 15 நபர்களும் மற்றொரு வாகனத்தில் 10 பேரும் வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை ஓரத்தில் நின்றவாறு சிறிது நேரம் ஆலோசனை செய்தனர். அப்போதுதான் அவர்களுக்கு ஆர்ப்பாட்டத்தின் கதாநாயகனான தேங்காயை கொண்டு வரவில்லை என்ற ஞாபகம் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவசரம் அவசரமாக தேங்காயை கொண்டுவர முயன்றனர்.

ஆனால், தேங்காய் கிடைக்காததால் இளநீர் மீது தாமரை ஸ்டிக்கரை ஒட்டிய பாஜகவினர், அதை கையில் ஏந்தி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் தலைமையில் ஏற்கனவே போலீசாரும் அதிரடி படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார், உள்ளே செல்லவோ, இளநீரை எடுத்து செல்லவோ அனுமதி இல்லை என்று கூறினர். இதற்கு பாஜகவினர் மறுப்பு தெரிவித்ததால், அனைவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் அருகில் இருந்த திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.