அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இரவு நேரங்களில் பெருநகரங்களுக்குச் செல்லும் வாகனங்களை நிறுத்தி, ஓட்டுநர்கள் தூக்கமில்லாமல் வாகனங்களை இயக்க அவர்களுக்கு முகத்தை கழுவ தண்ணீர் கொடுத்தும் சோர்வை போக்க தேநீர் வழங்கியும் காவல் துறையினர் அசத்தியுள்ளனர்.
ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காளிப்பாளர் மோகன்தாஸ் தலைமையில் காவல் துறையினர் தொடர்ந்து சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஓட்டுநர்களிடம் எடுத்துக் கூறிவருகின்றனர்.
சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்க வேண்டுமென அறிவுறுத்தி, இரவு நேர ஓட்டுநர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு வருகிறது. காவல் துறையினரின் இந்த செயல் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தலைக்கவசம் அணிய நாடகம் நடத்திய போக்குவரத்து காவல் துறை!