மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பார்வையாளராக ஹரியானாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஷேமந்த் (ஐபிஎஸ்) தமிழ்நாடு வந்துள்ளார். அவர் அரியலூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென அவர் ஒன்பது முறைவானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் பெரம்பலூர் எஸ்.பி ஆகியோர்விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு தேர்தல் பணியில் இருந்தும் அவரை விடுவித்தனர்.