அரியலூர் மாவட்டத்தில் நெகிழிப் பொருட்களை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் நகராட்சி சார்பில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உரையாற்றுகையில், ”நாம் எங்கு சென்றாலும் கையில் துணிப்பை எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நெகிழிப் பைகளின் பயன்பாடுகள் குறையும். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்” என்றார்.
பின்னர் பேசிய அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், ”தற்போது டீக்கடைகளில் கூட நெகிழிப் பைகளில் கட்டித் தருகிறார்கள். அதன்மூலம் நமது உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். நம் தலைமுறையும் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. எனவே நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தருமபுரியில் 2 கிலோ நெகிழிக்கு 1 கிலோ அரிசி!