அரியலூர் மாவட்டம் குமிழியம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் அருகில் அரசுக்குச் சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றைப் பொது மக்கள் குடிநீர் தேவைக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால், தற்போது பெய்த கனமழை காரணமாக, கிணற்றின் சுற்றுச் சுவர்கள் கரைந்து, கற்கள் கிணற்றுக்குள் சென்றன. இதன் விளைவாக கிணறு உள்வாங்கி பூமியில் புதைந்துள்ளது.
எனவே, பல ஆண்டுகளாக குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த கிணறு மண்ணுக்குள் சென்றதால், அதே இடத்தில் கிணறு அமைத்து தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரத்னா, அதே இடத்தில் கிணறு அமைக்கப்படும் என உறுதியளித்தார்.