அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து, செந்துறை பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் செந்துறை ஒன்றியத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்து வருகின்றன.
இந்நிலையில் அரியலூர் - கள்ளங்குறிச்சி சாலை அருகே செந்துறை செல்லும் சாலையில் குடிநீர் குழாயானது, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்படாததால், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகச் சென்றுகொண்டிருக்கிறது.
இதே போன்று மேலும் பல இடங்களில் தண்ணீர் வீணாகி வருகிறது.
இதையும் படிங்க: அரசு சிமெண்ட் ஆலையில் வேலை வழங்க வேண்டும் - விவசாயிகள் நூதனப் போராட்டம்