பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல சிறிதாகிக் கொண்டே வரும் சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியம் ஆகிவிடும் அதாவது நிழல் காலுக்கு கீழே இருக்கும்.
ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவதில்லை வருடத்திற்கு இருமுறை மட்டுமே ஒவ்வொரு ஊர்களுக்கும் வரும் . அதில் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிழலில்லா நாள் வந்தது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று நிழல் இல்லாத நாள் செயல்முறை விளக்கும் நிகழ்வாக ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் வட்ட வடிவில் நின்று தன் நிழல் பூமியில் மாற்று இடத்தில் விழாதவாறு செய்தனர்.