அரியலூர் மாவட்டம் ஓ.கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி. இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கிர்ணி பழம் பயிரிட்டிருந்தார். ஒவ்வொரு வருடமும் இவர் தனது வயலில் கிர்ணி பழம் பயிரிடப்படுவது வழக்கம். அவ்வாறே இவ்வருடமும் பயிரிட்டிருந்தார்.
உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் நோயால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் பொதுமக்கள். பல்வேறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக் குறியானது. குறிப்பாக பழங்கள், ஜூஸ் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
கோடைகாலத்தில் மக்கள் குளிர்ச்சிக்காக கிர்ணி பழம் அதிகம் வாங்குவார்கள். ஆனால் 144 தடை உத்தரவு வந்ததால் விற்பனைக்கு பழங்களை எடுத்துக்கொண்டு சென்றாலும் மக்கள் வெளியில் வராததால் விற்பனை செய்ய முடியவில்லை.
இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகளின் வாழ்க்கைதான். விற்பனை செய்ய முடியாத பழங்களை கடைசியில் கால்நடைகளுக்கு உணவாக அளிக்க வேண்டியுள்ளது. மேலும் பெரும்பாலான விவசாய நிலங்களில் விவசாயம் செய்யாததால் இருக்கும் பழங்களை எலிகள் வீணடித்து வருகின்றன.
மேலும் ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட சுமார் 60 ஆயிரம் முதல் 20 ஆயிரம்வரை செலவு செய்து விவசாயம் செய்ததால் கடைசியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளத்தில், கரோனா சிகிச்சை மையமாக மாறும் படகுகள்!