மக்களின் குடிநீர் தேவைக்காக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அரியலூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துவரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் மரங்களை வைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தென்னைமர உயரத்திற்கு பீரிட்டு அடித்து வீணாகிவருகிறது.
இதையறிந்த பொதுமக்கள் குழாய் உடைப்பு குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவலளித்ததையடுத்து, மக்களின் வேண்டுகோளை ஏற்று தண்ணீர் வீணாகுவதை தடுத்து நிறுத்த நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: டெல்லி குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை அமைச்சர் குற்றச்சாட்டு