அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல்கர் லாரி ஒன்று காணாமல் போனதாக அதன் ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பல்கர் லாரி மீன்சுருட்டி கொல்லாபுரம் இலுப்பைத் தோப்பு நின்றிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி கீழப்பலூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தபோது அவர் பல்கர் லாரி திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் இவர் பெயரில் சிதம்பரம் மணல்மேடு திருப்பனந்தாள் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதை அறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் ராஜசேகரை அவர் மீது குண்டர் சட்டம் பாய்த்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.