அரியலூர் மாவட்டம் வாரணவாசி பகுதியி்ல் சிமெண்ட் ஆலைகள் உள்பட சில தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இந்த சாலைகளிலிருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் லாரிகள் தார் பாய்களை உபயோகிக்காமல் வாகனங்களை இயக்குவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லாரிகளில் ஏற்றிச் செல்லும் கிராவல் மணல்கள் சாலையில் சிதறி விபத்தை ஏற்படுத்தி வருவதாக இருசக்கர வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
டிப்பர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, அரசு அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும், லாரி ஓட்டுனர்களின் கவன குறைவாலேயே இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தியதன் அடிப்படையில் தகுதி சான்று வழங்க உத்தரவு’