அரியலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சியிலுள்ள வணிக நிறுவனங்களில் உடையார்பாளையம் ஆர்டிஓ பூங்கோதை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தனர்.
அதன் அடிப்படையில் 20க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் முகக்கவசம் அணியாமல், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீதும், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் என ஒட்டுமொத்தமாக 39 பேரிடம் இருந்து 22,300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.