அரியலூரில் ரூ.207 கோடி செலவில் செயல்பட்டு வரும் புதிய அரசு சிமெண்ட் ஆலையை மாநில தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “இந்த அரசு சிமெண்ட் ஆலை ஆனது ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யக்கூடிய திறன் உடையது. தற்போது தனியார் சிமெண்ட் ஆலைகளில் சிமெண்ட் 430 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் அரசு சிமெண்ட் ரூ.295 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. தற்பொழுது அம்மா சிமெண்ட் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னை தீர்க்கப்படும்” என்றார்.