இன்று வாக்கு எண்ணிக்கை
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணி அளவில் தொடங்கப்படுகிறது.
வருமுன் காப்போம் திட்டம்
தமிழ்நாட்டில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில், 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின்கீழ் ஆயிரத்து 250 முகாம்கள், 20-க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரிவில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளன.
தமிழ்நாட்டில் மழை
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாள்களுக்கு தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி சிறப்புப் பேருந்து
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்தவூர் செல்லும் மக்களுக்கு ஏதுவாக, 16 ஆயிரத்து 540 பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.