அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் விருத்தாச்சலம், கும்பகோணம், மதனத்தூர் நெடுஞ்சாலையில் 10 அடி உயரம் கொண்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுவருகின்றன. இதில், 3000 மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து தற்போது 1,000 மரக்கன்றுகள் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் நடப்பட்டு வருகின்றன.
ஜெயங்கொண்டம், மதனத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையின் இரு ஓரங்களிலும் வேம்பு ,அரச மரம், ஆலமரம், நாவல் மரம், மகிழம்பூ மரம் போன்ற மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் செய்துவருகின்றனர். நடப்பட்ட மரங்களை பாதுகாக்கும் வகையில் சுற்றிலும் மூங்கில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் முறையில் தண்ணீர் விடுவதற்கு அதன் அருகே குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.