அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் கடைக்கு வருபவர்கள் முறையாக முகக்கவசம் அணிவதில்லை என மாவட்ட ஆட்சியருக்குப் புகார்கள் வந்தன. இதனை அடுத்து மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்த உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி, நகரப் பகுதியில் உள்ள ஜவுளிக் கடை, ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில், முகக்கவசம் அணியாதோர்களுக்கு ரூபாய் 200 அபராதமாக விதிக்கப்பட்டதோடு, கண்டிப்பாக அணியவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வில் சுமார் 11 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடைபெற்ற ஊட்டச்சத்து மாத விழா!