அரியலூர்: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான டிசம்பர் மாதம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 23.12.2022 அன்று காலை 10:30 மணி முதல் மாவட்ட ஆட்சியரக பிரதானக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் குறித்த தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு பெறலாம்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு: காளையர்களை சமாளிக்க காளைகளுக்கு கடும் பயிற்சி