ETV Bharat / state

டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி அலுவலர்கள்: விவசாயி தற்கொலை முயற்சி

author img

By

Published : Sep 3, 2019, 11:38 PM IST

அரியலூர்: இரண்டு மாத வங்கித் தவணை கட்டவில்லை என்று டிராக்டரை பறிமுதல் செய்ததால் கீழ் வண்ணம் கிராமத்தில் விவசாயி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

farmer suicide attempt after the tractor seized

அரியலூர் மாவட்டம் கீழ் வண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தேவேந்திரன். இவர் விவசாய வேலைக்கு டிராக்டர் வாங்குவதற்காக கடந்த 18.8.2017 அன்று அரியலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தவணைகளை அவர் கட்டவில்லை என்றும், இரண்டு அதனை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் வங்கியில் இருந்து கடந்த 30ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், அக்கடிதம் அவருக்கு இன்றுதான் வந்து சேர்ந்துள்ளது.

விவசாயி தற்கொலை முயற்சி

தவணத்தொகை செலுத்துவதற்கு காலக்கெடு இருந்தபோதிலும் தவணைகட்டவில்லை என்று கூறி வங்கி அலுவலர்கள் தேவேந்திரனின் டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த அவர், பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அவரின் அருகில் இருந்த சிலர், தேவேந்திரனை மீட்டு அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்தவமனைக்குயில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:அரியலூர் வாங்க வங்கியில் வாங்கிய கடனை 2 தவணை செலுத்தாததால் டிராக்டர் பறிமுதல் விவசாயி தற்கொலை முயற்சி

Body:அரியலூர் மாவட்டம் கீழ வண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தேவேந்திரன் விவசாய வேலைக்காக அரியலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 18 8 2017 அன்று டிராக்டர் வாங்குவதற்காக 9 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார் இந்நிலையில் இன்று இரண்டு தவணைகள் செலுத்தாததால் டிராக்டர் வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் ஆனால் தவணைத் தொகை கட்ட சொல்லி கடந்த மாதம் 30 ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனர் அக்கடிதம் கடிதம் இன்றுதான் கிடைத்ததாகவும் தவணைத் தொகையை 7ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தாகவும் ஆனால் அதற்கு முன்னரே இன்று பறிமுதல் செய்ததால் மனமுடைந்த தேவேந்திரன் பூச்சிமருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் உடன் அருகில் இருந்தவர்கள் தேவேந்திரன் மீட்டு அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Conclusion:விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே வங்கி மீது அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.